குறள்: 361 37. அவா அறுத்தல்
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்தவாஅப் பிறப்பீனும் வித்து
மு. வரதராசனார் உரை
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
மு. கருணாநிதி உரை
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்