குறள்: 374 38. ஊழ்

அறத்துப்பால்ஊழியல்

இருவே றுலகத் தியற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு

மு. வரதராசனார் உரை

உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

சாலமன் பாப்பையா உரை

உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

மு. கருணாநிதி உரை

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்

ஊழ் அதிகாரம் முழுவதும்