குறள்: 379 38. ஊழ்

அறத்துப்பால்ஊழியல்

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்

மு. வரதராசனார் உரை

நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.

சாலமன் பாப்பையா உரை

நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?

மு. கருணாநிதி உரை

நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

ஊழ் அதிகாரம் முழுவதும்