குறள்: 396 40. கல்வி
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு
மு. வரதராசனார் உரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
சாலமன் பாப்பையா உரை
மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.
மு. கருணாநிதி உரை
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்