குறள்: 40 4. அறன் வலியுறுத்தல்

அறத்துப்பால்பாயிரவியல்

செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி

மு. வரதராசனார் உரை

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

மு. கருணாநிதி உரை

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்

அறன் வலியுறுத்தல் அதிகாரம் முழுவதும்