குறள்: 402 41. கல்லாமை

பொருட்பால்அரசியல்

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று

மு. வரதராசனார் உரை

(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

மு. கருணாநிதி உரை

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது

கல்லாமை அதிகாரம் முழுவதும்