குறள்: 409 41. கல்லாமை

பொருட்பால்அரசியல்

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்கற்றா ரனைத்திலர் பாடு

மு. வரதராசனார் உரை

கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

சாலமன் பாப்பையா உரை

படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

மு. கருணாநிதி உரை

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்

கல்லாமை அதிகாரம் முழுவதும்