குறள்: 478 48. வலியறிதல்

பொருட்பால்அரசியல்

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைபோகா றகலாக் கடை

மு. வரதராசனார் உரை

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

மு. கருணாநிதி உரை

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை

வலியறிதல் அதிகாரம் முழுவதும்