குறள்: 49 5. இல்வாழ்க்கை

அறத்துப்பால்இல்லறவியல்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

மு. வரதராசனார் உரை

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

மு. கருணாநிதி உரை

பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்

இல்வாழ்க்கை அதிகாரம் முழுவதும்