குறள்: 509 51. தெரிந்து தெளிதல்

பொருட்பால்அரசியல்

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்

மு. வரதராசனார் உரை

யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

மு. கருணாநிதி உரை

நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது

தெரிந்து தெளிதல் அதிகாரம் முழுவதும்