குறள்: 526 53. சுற்றந் தழால்

பொருட்பால்அரசியல்

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத் தில்

மு. வரதராசனார் உரை

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

மு. கருணாநிதி உரை

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்

சுற்றந் தழால் அதிகாரம் முழுவதும்