குறள்: 544 55. செங்கோன்மை

பொருட்பால்அரசியல்

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு

மு. வரதராசனார் உரை

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

சாலமன் பாப்பையா உரை

குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

மு. கருணாநிதி உரை

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்

செங்கோன்மை அதிகாரம் முழுவதும்