குறள்: 554 56. கொடுங்கோன்மை
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு
மு. வரதராசனார் உரை
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
சாலமன் பாப்பையா உரை
மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.
மு. கருணாநிதி உரை
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்