குறள்: 559 56. கொடுங்கோன்மை
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்
மு. வரதராசனார் உரை
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
மு. கருணாநிதி உரை
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது