குறள்: 567 57. வெருவந்த செய்யாமை

பொருட்பால்அரசியல்

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்

மு. வரதராசனார் உரை

கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

மு. கருணாநிதி உரை

கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்

வெருவந்த செய்யாமை அதிகாரம் முழுவதும்