குறள்: 571 58. கண்ணோட்டம்

பொருட்பால்அரசியல்

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு

மு. வரதராசனார் உரை

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

மு. கருணாநிதி உரை

இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது

கண்ணோட்டம் அதிகாரம் முழுவதும்