குறள்: 579 58. கண்ணோட்டம்

பொருட்பால்அரசியல்

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை

மு. வரதராசனார் உரை

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை

தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

மு. கருணாநிதி உரை

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்

கண்ணோட்டம் அதிகாரம் முழுவதும்