குறள்: 583 59. ஒற்றாடல்

பொருட்பால்அரசியல்

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்த தில்

மு. வரதராசனார் உரை

ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

மு. கருணாநிதி உரை

நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை

ஒற்றாடல் அதிகாரம் முழுவதும்