குறள்: 603 61. மடி இன்மை
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியுந் தன்னினு முந்து
மு. வரதராசனார் உரை
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.
மு. கருணாநிதி உரை
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்