குறள்: 608 61. மடி இன்மை

பொருட்பால்அரசியல்

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்கடிமை புகுத்தி விடும்

மு. வரதராசனார் உரை

சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை

குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

மு. கருணாநிதி உரை

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்

மடி இன்மை அதிகாரம் முழுவதும்