குறள்: 616 62. ஆள்வினை உடைமை
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்
மு. வரதராசனார் உரை
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
மு. கருணாநிதி உரை
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்