குறள்: 618 62. ஆள்வினை உடைமை

பொருட்பால்அரசியல்

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்தாள்வினை இன்மை பழி

மு. வரதராசனார் உரை

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

சாலமன் பாப்பையா உரை

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

மு. கருணாநிதி உரை

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்

ஆள்வினை உடைமை அதிகாரம் முழுவதும்