குறள்: 620 62. ஆள்வினை உடைமை

பொருட்பால்அரசியல்

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்தாழா துஞற்று பவர்

மு. வரதராசனார் உரை

சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

மு. கருணாநிதி உரை

``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்

ஆள்வினை உடைமை அதிகாரம் முழுவதும்