குறள்: 623 63. இடுக்கண் அழியாமை

பொருட்பால்அரசியல்

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கிடும்பை படாஅ தவர்

மு. வரதராசனார் உரை

துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

சாலமன் பாப்பையா உரை

வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.

மு. கருணாநிதி உரை

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்

இடுக்கண் அழியாமை அதிகாரம் முழுவதும்