குறள்: 640 64. அமைச்சு

பொருட்பால்அமைச்சியல்

முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்திறப்பா டிலாஅ தவர்

மு. வரதராசனார் உரை

(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.

சாலமன் பாப்பையா உரை

செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

மு. கருணாநிதி உரை

முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்

அமைச்சு அதிகாரம் முழுவதும்