குறள்: 697 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல்
மு. வரதராசனார் உரை
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.
மு. கருணாநிதி உரை
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்