குறள்: 712 72. அவை அறிதல்

பொருட்பால்அமைச்சியல்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர்

மு. வரதராசனார் உரை

சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.

மு. கருணாநிதி உரை

சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்

அவை அறிதல் அதிகாரம் முழுவதும்