குறள்: 721 73. அவை அஞ்சாமை

பொருட்பால்அமைச்சியல்

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்

மு. வரதராசனார் உரை

சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.

மு. கருணாநிதி உரை

சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்

அவை அஞ்சாமை அதிகாரம் முழுவதும்