குறள்: 73 8. அன்புடைமை
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போ டியைந்த தொடர்பு
மு. வரதராசனார் உரை
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்
மு. கருணாநிதி உரை
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்