குறள்: 730 73. அவை அஞ்சாமை

பொருட்பால்அமைச்சியல்

உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்

மு. வரதராசனார் உரை

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை

அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.

மு. கருணாநிதி உரை

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்

அவை அஞ்சாமை அதிகாரம் முழுவதும்