குறள்: 736 74. நாடு

பொருட்பால்அமைச்சியல்

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை

மு. வரதராசனார் உரை

பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

மு. கருணாநிதி உரை

எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்

நாடு அதிகாரம் முழுவதும்