குறள்: 739 74. நாடு

பொருட்பால்அமைச்சியல்

நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு

மு. வரதராசனார் உரை

முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

சாலமன் பாப்பையா உரை

தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

மு. கருணாநிதி உரை

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்

நாடு அதிகாரம் முழுவதும்