குறள்: 779 78. படைச் செருக்கு
இழைத்த திகவாமைச் சாவாரை யாரேபிழைத்த தொறுக்கிற் பவர்
மு. வரதராசனார் உரை
தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.
சாலமன் பாப்பையா உரை
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?
மு. கருணாநிதி உரை
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது