குறள்: 79 8. அன்புடைமை
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப் பன்பி லவர்க்கு
மு. வரதராசனார் உரை
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை
குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?
மு. கருணாநிதி உரை
அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?