குறள்: 802 81. பழைமை

பொருட்பால்நட்பியல்

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குப்பாதல் சான்றோர் கடன்

மு. வரதராசனார் உரை

நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை

நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.

மு. கருணாநிதி உரை

பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்

பழைமை அதிகாரம் முழுவதும்