குறள்: 809 81. பழைமை
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு
மு. வரதராசனார் உரை
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
சாலமன் பாப்பையா உரை
உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.
மு. கருணாநிதி உரை
தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்