குறள்: 811 82. தீ நட்பு

பொருட்பால்நட்பியல்

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது

மு. வரதராசனார் உரை

அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

சாலமன் பாப்பையா உரை

உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

மு. கருணாநிதி உரை

நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது

தீ நட்பு அதிகாரம் முழுவதும்