குறள்: 817 82. தீ நட்பு

பொருட்பால்நட்பியல்

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்

மு. வரதராசனார் உரை

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை

சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.

மு. கருணாநிதி உரை

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்

தீ நட்பு அதிகாரம் முழுவதும்