குறள்: 825 83. கூடா நட்பு

பொருட்பால்நட்பியல்

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற் றன்று

மு. வரதராசனார் உரை

மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை

மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.

மு. கருணாநிதி உரை

மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது

கூடா நட்பு அதிகாரம் முழுவதும்