குறள்: 840 84. பேதைமை

பொருட்பால்நட்பியல்

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்

மு. வரதராசனார் உரை

சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

மு. கருணாநிதி உரை

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது

பேதைமை அதிகாரம் முழுவதும்