குறள்: 855 86. இகல்

பொருட்பால்நட்பியல்

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேமிகலூக்கும் தன்மை யவர்

மு. வரதராசனார் உரை

இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.

சாலமன் பாப்பையா உரை

தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?

மு. கருணாநிதி உரை

மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை

இகல் அதிகாரம் முழுவதும்