குறள்: 860 86. இகல்

பொருட்பால்நட்பியல்

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு

மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை

மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.

மு. கருணாநிதி உரை

மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்

இகல் அதிகாரம் முழுவதும்