குறள்: 892 90. பெரியாரைப் பிழையாமை
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்பேரா இடும்பை தரும்
மு. வரதராசனார் உரை
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.
மு. கருணாநிதி உரை
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்