குறள்: 926 93. கள்ளுண்ணாமை

பொருட்பால்நட்பியல்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

மு. வரதராசனார் உரை

உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

மு. கருணாநிதி உரை

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்

கள்ளுண்ணாமை அதிகாரம் முழுவதும்