குறள்: 936 94. சூது

பொருட்பால்நட்பியல்

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்

மு. வரதராசனார் உரை

சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

சாலமன் பாப்பையா உரை

சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.

மு. கருணாநிதி உரை

சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்

சூது அதிகாரம் முழுவதும்