குறள்: 94 10. இனியவை கூறல்

அறத்துப்பால்இல்லறவியல்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

மு. வரதராசனார் உரை

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை

எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

மு. கருணாநிதி உரை

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை

இனியவை கூறல் அதிகாரம் முழுவதும்