குறள்: 98 10. இனியவை கூறல்

அறத்துப்பால்இல்லறவியல்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்

மு. வரதராசனார் உரை

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

மு. கருணாநிதி உரை

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்

இனியவை கூறல் அதிகாரம் முழுவதும்