குறள்: 841 85. புல்லறிவாண்மை
மு. வரதராசனார் உரை
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
புல்லறிவாண்மை என்பது தாழ்ந்த அறிவை ஆளுந்தன்மையை அதாவது பயன்படுத்தலைக் குறிக்கும். புன்மைமிக்க அறிவினைக் கைக்கொண்டு, பெருமையுடையவன்போல் வாழ முயலுதல் ஆம். இது சிற்றறிவின் செறிவைச் சொல்வது. தான் சிற்றறிவுடையவனாயிருந்தும் தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து செருக்குடன் நடப்பது புல்லறிவு.
குறள்: 841 85. புல்லறிவாண்மை
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
குறள்: 842 85. புல்லறிவாண்மை
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
குறள்: 843 85. புல்லறிவாண்மை
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.
குறள்: 844 85. புல்லறிவாண்மை
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.
குறள்: 845 85. புல்லறிவாண்மை
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
குறள்: 846 85. புல்லறிவாண்மை
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
குறள்: 847 85. புல்லறிவாண்மை
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
குறள்: 848 85. புல்லறிவாண்மை
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
குறள்: 849 85. புல்லறிவாண்மை
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
குறள்: 850 85. புல்லறிவாண்மை
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.