குறள்: 1007 101. நன்றியில் செல்வம்

பொருட்பால்குடியியல்

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று

மு. வரதராசனார் உரை

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

மு. கருணாநிதி உரை

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது

நன்றியில் செல்வம் அதிகாரம் முழுவதும்