குறள்: 1008 101. நன்றியில் செல்வம்
நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று
மு. வரதராசனார் உரை
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.
மு. கருணாநிதி உரை
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!